தாயை கழுத்தை அறுத்து
கொன்ற
காதலை நிராகரித்த இளம்பெண் கொல்லப்பட்ட
கணவனை அடித்துக் கொன்ற மனைவி
பெற்ற தாயை சுத்தியலால்
அடித்துக் கொன்ற மகன்
பெண்ணை உயிரோடு கொளுத்திய கள்ளக் காதலன்
செய்திகளைப் படித்துப்
பயந்த
மகனின் வாயை மூடி
கலி முத்திப்போய்
அழுகியும் போச்சே என்றார் தந்தை
க.ரவீந்திரன்.