தலைப்பு : தாய் எனும் தெய்வம்
உன் உதிரத்தில்
உருவாக்கி விட்டுச் செல்லவா எனை சுமந்தாய் அம்மா?
அன்னையில்லாக் கொடுமை ஏன் கொடுத்தாய் அம்மா?
உன் போதையின் விடையா நான்?
கொடுங்கோலர்களால் உனக்கு உன் விருப்பமின்றி அளிக்கப்பட்ட பரிசா நான்? இயலாமையின்
சுமந்த உனக்கு இவ்வுலகில் எனை காட்ட விருப்பின்றி
போனதோ!
உன் மடி சாய முடியாமல்
உன் நிழலினில் உறங்கும் வரமே கிடைத்தனை எனக்கு இப்பிறவியில்!
இன்னொரு ஜென்மம் வேண்டுமம்மா எனக்கு உன்னுடன் வாழ…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)