தலைப்பு: தாலாட்டும் தனிமை
பசுமை இலை படர்ந்து
தேகம் இளமையாகி
தனிமையில் தனிருக்கேன்
அழகாய் தானிருக்கேன்
ஜோடியாய் நானிருந்தேன்
தெருவோடு தானிருந்தேன்
நித்தம் நரகமாய்
வெறுமையாய் வாழந்திருந்தேன்
தொலைந்து போனதோ
அறுந்து போனதோ
மறந்து போக
மனம் மறுக்கும்
மரத்து போன மனதாலே
மறந்துபோக நினைத்தேன்
பிரிவில் இத்தனை சுகமா?
மனம் எல்லாம்
மணம் வீசுது மலரால்!