தித்திக்கும்
கல்கண்டு
திகட்டாமல் அவர் பெயர் சொன்னது
லேனா-ரவி என
இரண்டு முத்துக்களையும்
தமிழ் உலகுக்கு தந்தது
நோட்டில் எழுதி பார்த்தவரையெல்லாம்
எழுத்தாளராக்கிய தங்க மனசுக்காரர்
ஐம்பெரும் காப்பியம்
அழியாப்புகழை பெற்றதை போல
எத்தனை பிரசுரங்கள்
அனுதினமும் முளைத்தாலும்
மனதில் மணிமேகலையாய்
கல்வெட்டாய் நிலைப்பவரே
காலன் கொண்டு போனாலும்
காலத்தால் உன் பெயரை
அழிக்க முடியாதய்யா!
கவிதையின் கருப்பொருள்
புரியவில்லையென்றால் தான் என்ன?
கருப்பு கண்ணாடி என்றாலே
முதலில் ஞாபகத்திற்கு வருவது
தமிழக ஜேம்ஸ்பாண்டு
ஐயா தமிழ்வாணன் தானே!
அஞ்சலிட்ட தபால் கவரில்
அவர் பெயர் எழுத தேவையில்லை
கருப்பு கண்ணாடி வரைந்து பார்
தணிகாசலம் சாலை
அவர் முகவரி சொல்லும்!
லி.நௌஷாத் கான்-