பூட்டியதை திறக்கும்
திறவுகோல் சாவி…
மனதைத் திறக்கும் திறவுகோல் எண்ணங்கள்…
எண்ணங்களின் சாவி சொற்கள்….
இசையின் திறவுகோல் ராகமும் சுருதியும்…
பெரிய வீட்டின் பாதுகாப்பு கதவு….
அதற்கு ஆதாரம்
அதன் சிறு பூட்டு….
பூட்டின் செயல்பாடு
குட்டிச் சாவி தானே!
பூட்டும் சாவியும் இணை பிரியாதவை.. அன்புக் கணவனும் மனைவியும் போல…
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை..
சாவி தொலைந்தால் பூட்டு உடைபடும்…
சொற்கள் மாறினால்
உறவு உடைபடும்…
சாவியைக் காப்போம்….
S. முத்துக்குமார்