தேனீர் அமுதே
புன்னகையில் பூத்து
உரையாடலில் கரைந்து
ஸ்பரிசத்தில் நனைந்து
உன்னோடு கலந்த
என் காதலை ஊற்றி
உனக்கென நானும்
எனக்கென நீயும் ;
இல்லை !இல்லை!
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
இடைவிடா இன்பத்தில்
நம்முள் தோன்றி
கோப்பைக்குள் மூழ்கி
தேனீரில் நனைந்த
தேன் அமுதே…..
உயிருக்குள் உயிராய்
கலந்து உரையாடல் இன்றி
….உறவடிய தருணம்….
உயிரில் கலந்த உன்
ஸ்பரிசம் என் ஜீவன்
உள்ள வரை
உன்னுடன் பேசும் ……
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: தேனீர் அமுதே
previous post