அச்சம் என்ற மனநோய் ஆரோக்கியத்தை பாதிக்க
இன்னலும் சேர்ந்து
ஈடில்லா துன்பம் வர
உள்ளம் துவண்டு
ஊக்கம் குறைய
என்ன செய்வது என
ஏக்கம் வந்துவிட
ஐயத்துடன் ஜோதிடரை
ஒருமுறை தேடி போய்
ஓராயிரம் குறை உரைக்க
ஔடதமாக எமரால்டு
அஃகுதே உனக்கு ஒரே
தீர்வு என்று சொல்லி
எமரால்டு பதித்த
மோதிரம் ஒன்றை கொடுக்க சோர்வின்றி நம்பினேன்
நடக்குமா?………….
நடக்காதா?………….
நல்ல தீர்வு வேண்டுமென
மெல்ல நம்பினேன்.
உஷா முத்துராமன்