நடனப்போட்டியில் அறிமுகம்,
இந்தத் தேவதையின்திருமுகம்….
உறைந்து விட்டதென்
உயிர்கூட்டில்,.
நம் நடனம் காணாது அந்திச்
சூரியனும் அழுது சிவந்தானோ!
நீளவேண்டும் இந்த மாலைப்பொழுது,
அந்தச் செக்கர் வானம் போல!
உன் பட்டுக்கரம் பட்டவுடன்
விட்டுத் துடிக்குது நெஞ்சம்!
கிறங்கித்தான் போனேனடி நானும்
கிறுக்கனாய் ஆனேனடி!
காந்தமாய் இழுக்கிறாயடி,
இரும்பான என் மனதை!
சாந்தமான உன் பார்வைச்
சுணைக்குள் காணாமல்
நானும் போனேனடி!
நீ விலகிடும் பொழுதுகளில்
வேரறுந்த மரமானேன்!
உலவிடும் உன் நினைவுகளால்
உயிர் பெற்றுத் தழைக்கின்றேன்!
உன் கரமென்ற கயிற்றுக்குள்
காலமெல்லாம் கட்டுண்டு கிடக்க
வரமொன்று தாராயோ ஆருயிரே!
பற்றிய கரங்களுடன் பயணிப்போமா
நம் காதல் தேசம் தேடி!
பற்றிக்கொண்ட என் கையை
சற்றே நீயும் விட்டு விடாதே!
காற்றுக்கூடப்புகாவண்ணம்
காதலியே நீயும் இறுகப்பற்று!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)