நல்லதை மட்டுமே பார்த்தேன்
பார்க்காதே என்றது
நல்லதை மட்டுமே
கேட்டேன்
கேட்காதே என்றது
நல்லதை மட்டுமே செய்தேன்
செய்யாதே என்றது
எங்களை போல் பச்சோந்தியாய் வாழ் என்றது
முடியாது என்றேன்
தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்டேன்
மிரட்டி பார்த்தது
மற்றவர்களை போல் நீயும் இரு என்றது
இறுதியில் பைத்தியக்கார பட்டமும் தந்தது
இந்த பொல்லாத உலகத்தில்
வாய் மூடி,கண் பொத்தி,செவிடனாய் வாழ்வதே உத்தமம்
மற்றவர்களை போல் நீயும் இல்லாமல் போனால்
உறக்கத்தை கூட
நிம்மதியில்லாமல்,வர விடாமல் செய்து விடுவார்கள்.
சமூகத்தில் சமநிலையோடு வாழ அவர்களை போல்
போலியாய் பிரதியெடுத்து வாழ்!
-லி.நௌஷாத் கான்-