நட்டு வைத்த நாவாசைக்கெல்லாம்
முட்டிடும் வெள்ளைப் பாறையை
எட்டித் தள்ளி எதிர்த்து நின்று
கட்டி உதிர்ந்த மணற்சிற்பமாய்
புட்டாய் உதிர்த்த லட்டாய்
சொட்டச் சொட்ட இனிமை நவின்று
புகட்டத் தடை கொண்டோருக்கும்
திகட்டாத் திரவியமானாலும்
சிட்டிகையால் சீரற்று இரைக்காது
பட்டுக்கையால் பட்டெனத் தூவி
கட்டுக்கோப்பாய் கவனித்துண்டால்
கட்டுடல் மேனி என்றும் கைவசமே!
புனிதா பார்த்திபன்