படம் பார்த்து கவி: நிலமகளும்

by admin 1
29 views

நிலமகளும் பசலை
கொள்கிறாள்
சீதளம் மிக்க
அந்திவலை துளிகளில்….

ஆலியவன் அலைச்சாரலில்
நாணலும்
நாணம் கொண்டு
சில்லிடுகிறாள்..

மென்சாரல் அவள்
பொன்மேனி தொட
மேககூட்டம் மோகம்
கொண்டு கார்முகிலாய் மாற
பனித்துளியில்
இல்லா பேரழகை
மழைத்துளியில்
கண்டு விடுகிறாள்
வனமகள் ✨✨✨

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!