நீயின்றி அமையாது
கொண்டாட்டங்கள்.
உருகி வழியும்
க்ரீம்
உலக இயல்பைக் காட்டுதோ?
அழகான வெளித்தோற்றம்
புறவுலகம் போலவோ?
உள்ளிருக்கும் இனிப்பு
அக அழகெனத்
தோன்றுதோ?
எதுவாயினும்
இந்நாளில்
வாழ்க வாழ்கவே
இந்துமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)