நீலக்கடல்
நீலக்கடலே…….
நெய்தல் நாயகனே…
உன் மடியில்………
எத்தனை உயிர்கள்
உயிரோடு, உயிரற்று
நீ அறியாத
கோடி புதையல்கள்
கரை ஒதுங்கும்
சிப்பிகள், முத்துகள்
பொங்கும் நுரை
ததும்பும் அலைகள்
பால்யத்திற்கு இழுக்கும்
கடந்தகால நினைவுகள்
கடற்கரைக் காதல்
கலங்கரை விளக்கம்
குவிந்த பண்டங்கள்
பார்வையில் பதிந்த
அத்தனையும் அழகு……!
ஆழ்கடல் அமைதி
ஊழிகால பிரளயம்
கடல் அறியா பிரமிப்பு
பத்மாவதி