நீலக் கடலே
செங்கதிரின் பிரதிபலிப்பே
கண் கூசாத செவ்வானமே
பார்க்க பார்க்க திகட்டாத
இளங்காலைப் பொழுதே
அழகான இயற்கை காட்சியை
காகிதத்தில் பிரதிபலிக்க
வண்ணப் பென்சில்களை
எடுத்து வைத்தேன் மேஜையிலே
காலை உறக்கம் கலைய
சூடாக தேநீரும் தயார்
ஓவியம் எழுத
என்னவன் எங்கே?
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)