நீல மயிலே, உன் தோகையின் மதிப்பு உனக்குத் தெரியாது ஆனால்…
மாணாக்கனுக்குத் தெரியும், அவன்
அதை மடித்து புத்தகத்தில் வைக்கும்போது…
விசிறி விற்பவனுக்குத் தெரியும் அதனை வடிவமைத்து விற்கும்போது..
அலங்கார அங்காடிக்குத் தெரியும் அதன் அருமை என்னவென்று…
அழகான கிருஷ்ணனின் தலையில் பீலியாக இருக்கும்போது…
ஆதலினால்,
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச் சிறகினை… படித்தால் நகைப்புத்தான் வரும், இல்லையா?
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)