என்னவனே…
பரந்து விரிந்த
விண்வெளியில்
பல கிரகங்கள்
இருந்தாலும்
சூரியனை மட்டுமே
சுற்றும் பூமியை
போல்….
உலகில்
எத்தனை
ஆண்களை
நான்
கடந்தாலும்
என் மனம்
என்னவோ
உன்னை மட்டுமே
சுற்றுகிறதடா….
பூமி சுழல
சூரியன்
வேண்டும்
என்பதை
போலவே..
காலமெல்லாம்
நான்
வாழ
காதலோடு
நீ வேண்டும்…..
🩷 லதா கலை 🩷