நீண்ட பெரிய
துடுப்புகள்…….
ஆயினும் பறந்திடா…….
மீன்கள் பிரிய உணவாம்……
கடல் நீரே குடிநீராய்…….
பாலின் கண் நீரைப்
பகுக்கும் அன்னம் போல்
சுரப்பிகள் கொண்டு
நீரின் கண்
உப்பைப் பிரிக்கும் ……
‘உப்பல்’ குயின்களாம்
பென்குயின்கள்……
ஐந்தறிவே பெற்ற
ஜீவன்கள் உணர்ந்த
பகுத்தல் பண்பு
உபரியாய்
ஆறாம் அறிவு
பெற்ற ஜீவன்கள்
உணராதது ஏனோ?
நாபா.மீரா