பசி மயக்கும்
விழிகளுக்கு
அங்கமெலாம்
மின்னிக் காட்டுதம்மா
அப்பிள் பழமொன்று!
பசி நிறைந்த
வயிற்றுக்குள்
வாயுவின்
அசைவெல்லாம்
இசையாக மாறுதிங்கு!
பசி கொளுத்தும்
நாவினில்
உமிழ்நீரோ
சொட்டுச்சொட்டாய்
உருண் டெழுகிறது!
பசி தீர்க்க ஏழையென்
கை தவழுவாயா…?
விதி வினையென
கை நழுவுவாயா…?
*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை
படம் பார்த்து கவி: பசி மயக்கும்
previous post