அதிகாலை மேகம்
நீர்த் தெளிக்க…
சில்லென எங்கும்
குளுமை பரவ…..
புல்வெளி எங்கும்
பசுமை படர…..
தென்றலில் தெம்மாங்கு
இசை பாட …..
பச்சை இலைமேல்
பரவசத்தோடு காத்திருக்கும்
பனித்துளியே… பாவையே…
கதிரவனைக் கண்டவுடன்
காதலில் கலந்துக்
காணாமல் போனதென்ன?…
பத்மாவதி
படம் பார்த்து கவி: பனித்துளி
previous post