படம் பார்த்து கவி: பயணங்கள்

by admin 1
35 views
  • பயணங்கள் *
    சென் நிற ஆடை கட்டியது
    போல் செங்கதிரோன்
    ஒளியில் மாடமாளிகைகளுக்கு
    மத்தியில் நதியின் பயணம்;
    எண்ணிலடங்கா நினைவளைகலை சுமந்து
    மிதிபடுகிறது
    என் மிதிவண்டி ; ,,,
    மனிதனும் மிதிவண்டியும்
    ஒருவிதத்தில் ஒன்றாகி விடுகிறோம் இருவருமே
    காற்றுள்ளவரை மட்டுமே உயிர்வாழ்கிறோம்;,,,,
    வாழ்வில் எத்தனை
    மாற்றங்கள் வந்தாளும்
    வாழும் வரை மனிதனின்
    நிறத்தையும் குணத்தையும்
    மாற்ற முடியாததுபோல்;,,,
    வானூர்தியில் சென்றாலும்,
    நதியில் மிதந்தாலும்,
    மிதிவண்டி பயணத்தில்
    மிதக்காத மனமில்லை;,,,,
    வண்ண வண்ண
    விளக்குகளால் செயற்கையாய்
    மாளிகைகள் ஜொலித்தால்;,,,
    வண்ண வண்ண மலர்களால்
    இயற்கை அள்ளி தந்த அழகை
    எவறாலும்
    வென்று விட முடியாது…!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!