ஞாலத்தில் ஜனித்த பொழுது
பற்கள் இல்லை…
நான் வளர வளர
சொல்லைப் போல்
வெண்பல்லும் முளைக்க
அதை பராமரிக்க வாங்க
வேண்டியது
பற்பசையும் பற் துரிகையான உன்னையும் எனப் புரிந்து
வெண்ணை போல்
வெண்மையான பற்களுக்காக
திண்மையுடன் வாங்கினேன். தூரிகைக் கொண்டு
பேரிடரின்றி என் பற்களை பாதுகாத்தாலும்
தலைமுறை பொறுத்தே
பற்கள் அமையும் என
நேற்றும் நம்பினேன்
இன்றும் நம்புகிறேன்
நாளையும் நம்புவேன்
உன்னை பயன்படுத்துவேன்
உஷா முத்துராமன்