பாத்திரம் விளக்கி..
தேங்காய் நார்
தேய்ந்து போனதால்
சுத்தம் செய்யும்
நண்பன் ஆனாய்.
ஒரு புறம்
கரடுமுரடாய்
பிசுக்கு எடுப்பாய்..
இன்னொரு புறம்
நுரை தந்து
கரை போக்குவாய்.
சமயத்தில் மேடையும்
துடைப்பாய்..
கண்ணாடியும்
மின்னச் செய்வாய்.
கைகள் நோகாமல்
தொற்று நேராமல்
பாத்திரம் விளக்கி
பத்திரம் செய்வாய்.
அடுக்களையின்
அன்றாட தேவை நீ.
S. முத்துக்குமார்