கண்கள் கலந்தது
கைகள் இணைந்தது
உன் உயிர் என்னிடமும்
என்னுயிர் உன்னிடமும்
இடமாறியும் கொண்டது
வாழ்க்கை ஏனோ
சக்கரையாய் இனிக்க தான் துவங்கியது
ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்பார்கள்
காலம் செல்ல,செல்ல
மனசு ஒத்துப் போகாத
உறவுகளுக்குள்
ஈகோவால்
பிரிவும் வந்தது
முறிவும் வந்தது
காமம் கடந்த இல்லறம் மட்டுமே
கடைசி வரை வரும் என்பதை
மண் நம்மை திண்ணும் வரை
மனிதன் உணர்வதே இல்லை!
-லி.நௌஷாத் கான்-