1.பண செடி விற்று பணம் பெற்றான்…
ஜோசியம் உண்மைதான் போல அவனுக்கு…
2. அடுக்க குடியிருப்பில் ஆங்காங்கே பசுமை ஆல மரம் பண செடி..
3. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சுகாதாரமாய் வளர்கிறது பணச் செடி… மருத்துவமனை தாதி போல தினம் தினம் பணிவிடை கை அசைத்து போய் வருகிறேன் என சொல்வது மட்டும் தான் இல்லை மற்றபடி வீட்டிலோரு நபராய் வளர்ந்து வருகிறது பணச் செடி…பணம் வந்ததா இல்லை சென்ற தா எப்படியும் வளர்க்கிறேன் இந்த பணச் செடி…
4. உன் பார்வை பட்டதும் புத்துணர்ச்சி பெறுகிறது பணச் செடி அடியே நானும் தான் காத்திருக்கிறேன் உன் சோம்பலையாவது அனுப்பு சீக்கிரம்…
5. பணச் செடி வந்த பின் வாங்கிய லாட்டரியில் பணப் பரிசு விழவில்லை… அதிர்ஷ்டம் இல்லை…
6.யாருமில்லா நேரங்களில் உன்னிடம் பகிர்ந்திருக் கிறேன் என் ரகசியங்களை… ஒவ்வொரு முறையும் உன் தலை அசைத்து கேட்டிருக்கிறாய் மனம் விட்டு அழும்போது தேற்றி இருக்கிறாய்… பணச் செடி இல்லை எனக்கு நீ என் மனச் செடி…
7.மழை வரும் என்பதற்கு பதிலாக பணம் வரும் என்கிறார்கள் நாத்திகம்…
கங்காதரன்