பூக்களிட்ட கண்ணாடி குடுவை உருகுதலில்
நிறம் படர்ந்த தீயொன்று எரிகிறது
சுடர் பரவிய மெல்லிய சூடு
பூக்களின் மென்மையை கருக்கிக் கொண்டிருக்க
நீர் கசியும் திரவமாய் உயிர் உறைகிறது
காற்றின் சுழலுக்குள் ஒளி திசைகள்
ஒவ்வொன்றாக அணைந்து மின்னும் கடைசி தருவாயில்
அடி தடித்து தேங்கி நிற்கும்
மெழுகின் திட உடலென சிதைந்திருக்கிறார்கள்
எங்கோ யாரோ புணர்ந்து வீசிய பல மலர்கள்…..
🌺 நிழலி