திருமண நாளில்
மாங்கல்யம் கட்டி
கழுத்தை சுற்றி
கையை வளைத்து
அவள் நெற்றியில்
குங்குமப் பொட்டிட
அவள் மறைந்ததும்
மெலிதாக விபூதி பூசி
கீழே ஸ்டிக்கர் பொட்டிட்ட
அவளது ஒளிப் படத்தில்
நெற்றியின் கீழே
குங்குமப் பொட்டிட
உயிரோடு உள்ள போது
அவள் பூவை பொட்டை
ரசிக்க மறந்தேன்
க.ரவீந்திரன்.