சுகாதாரத் திண்டு,
பெண்களின் சுத்தத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்திற்கும் தானே!
தீட்டு என்று கூறி அடக்கிவைப்பர்
வீட்டினில்!
பிள்ளை இல்லையெனில்
மலடி என்ற
பட்டம் கொடுப்பர் நாட்டினில்!
பழைய துணிகளின்
பயன்பாட்டு முறையின்,
நோய் தொற்றால்
உயிரிழந்த மகளிரின்,
வலி நிறைந்த இரவுகளின் விடிவெள்ளி நீயே! கருப்பையில்
தங்கிய கழிவுகளை வெளியேற்ற நவீன அறிவியலின் அருட்கொடை நீயே!!
உதிரங்களே உருவங்களாய் உருபெற எச்சங்களை மிச்சமின்றி, வெளியேற்றி நோய் தாக்காமல் காக்கும்
துணைவியே நீயே!!
அக்காலத்தின் துயரில் தோள் சாய துணையின்றி தவிக்கும் மங்கையரின் வலி நிவாரணி நீயே!!!
மாதாந்திர தொந்திரவு என நினைக்கும் பேதையர், பெண்மையின் அடையாளமின்றி பிறந்த மங்கையரின் மனதை அறிவர் யாரோ?
இப்படிக்கு
சுஜாதா.