பொன்தூவும் செங்கதிரோன் உதித்தெழவே
முகில் கீறி வெளிச்சம் பரவி பாரெங்கும்
வெளிச்சப்பூக்களைச் சிதறடிக்க!
பூந்தென்றல் கவரிவீசி ஆழியைத் தாலாட்ட,
மெல்லிய காற்றின் இதமான அழகியஅசைவிலே வரி வரியாய் வெள்ளி அலைகள் ஆர்ப்பரிக்க,
நடுக்கடல் போல மௌனமானது மனது!
உடற் புகுந்த செம்புனல் ஊனுயிர்
காத்தற்போல சிந்தையைத் தூண்டி,
சோம்பல் நரம்புகளை மீட்டெடுக்க,
சூடான தேநீரை உவகையுடன் உட்கொள்ள,
உடலெங்கும் புத்துணர்ச்சி விரிந்து பரவ,
மெல்ல விரித்தேன் என் குறிப்பேட்டின் வெற்றுத் தாள்களில், சாளரவழிஓவியத்துக்கொரு வண்ணக்காவியம் படைக்க,…
மு.லதா
படம் பார்த்து கவி: பொன்தூவும்
previous post