மகளே தாயாக
எண்ணம் இல்லா
வாழ்வில்
வண்ணங் கொண்ட
ஓவியமாய்
பிள்ளை இல்லா
துயரறுக்க
ரோஜா நிறத்தோடு
கள்ளமில்லா சிரிப்போடு
பிறந்த மகளே…..
காலங்கள் கடந்து
வளர்ந்து
பொறுப்புகள் பல
சுமந்தாலும்
இன்றும் அதே புன்னகை
ஆரோக்கிய தேகமும்
சீரிய சிந்தனையோடு
என்றும் நீடுழி வாழ்க
என் மகளாக
அல்ல அல்ல
என் தாயாக
பத்மாவதி