மண்ணை அணைத்தபடி கடக்கும் இருளை
சிரித்தபடி தன்கைகளை விரிக்கும் கதிரவனுக்குத் தெரியும் நேற்றை விட இன்று நல்ல பொழுது என்று…!
நேற்று தோற்றவன்
இன்று விடியலை
வரவேற்ப்பான் வெகு சீக்கிரமே! நேற்று மருத்துவ வாசம்
இன்றோ சுகவாசம்!
நேற்றைய எதிரிக்கு
இன்று கடக்கையில் ஒரு புன்னகை!
வயலில் விடியும்
தினம் தினம் உழவனின் வாழ்க்கை!
இரவு பணி
விடியலில் உறக்கம்
பாத்திரங்களின் தாலாட்டு சத்தத்தில்!
நாளிதழில் விழிப்பர்
தினபலன் பார்க்க.!
வியாபார தலங்களில் விடியும் உழைப்பவன்
கரங்கள்!
தெய்வங்களுக்கும் விடியும்…
பூசாரி வந்து
பூப் போடும் வரை..!
விடியலை எதிர்பார்த்த
உலகம் தினமும் உறங்கச் செல்கிறது
நம்பிக்கையில்…
விடியும் என்று..!!!
தீபா புருஷோத்தமன்