கொடியிடையில்
மண் குடம் சுமந்து
ஒய்யார நடை
நடந்து வரும்
பானை பிடித்த
பாக்கியசாலி
மருமகள் உடைத்தால்
பொன் குடமாம்
மாமியார் உடைத்தால்
மண் குடமாம்
அடுப்பறையிலேயே
குழாய் தண்ணீர் கொட்ட
மண் குடமும் இல்லை
மாமியார் மருமகள்
வேறுபாடும் இல்லையே.
க.ரவீந்திரன்
கொடியிடையில்
மண் குடம் சுமந்து
ஒய்யார நடை
நடந்து வரும்
பானை பிடித்த
பாக்கியசாலி
மருமகள் உடைத்தால்
பொன் குடமாம்
மாமியார் உடைத்தால்
மண் குடமாம்
அடுப்பறையிலேயே
குழாய் தண்ணீர் கொட்ட
மண் குடமும் இல்லை
மாமியார் மருமகள்
வேறுபாடும் இல்லையே.
க.ரவீந்திரன்