சுழல விட்டு செஞ்சாங்க
சூழையில் வெந்து வந்தீங்க
மணக்க மணக்க சோறு தந்தீங்க
மனசு நிறைய வச்சீங்க
. குளிரூட்டியாக நீங்க தான் இருக்க
குளிர்சாதன பெட்டி வேண்டாங்க
மகிமை இப்ப கூடு துங்க .
மக்கள் மனதை கவரு ரீங்க
இசையில் இன்பம் கூடுதுங்க
இல்லத்தில் நாலு இருந்துங்க பக்குவமா கையாள தெரியல்லன்னா
பட்டுன்னு உடைஞ்சி போயிடுறீங்க
மண்ணைக் கொண்டு செஞ்சதாலே மண்பானை என்று பெயரு வந்ததுங்க!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்