மது எதுவோ மாய உலகினிலே
மயங்கும் நிலையுடைய அத்தனையும் மதுவாகிடுமே
மலராடும் மணிவண்டினுக்கு தேனதுவே மதுவாகுது
மழலையரின் மாசிலாத புன்சிரிப்பிலும் மதுவுளதே
மடிசாய்க்கும் அன்னையவள் அரவணைப்பும் மதுவன்றோ
மாற்றான்முன் மக(ளை)னை தலைநிமிர்த்தும் தந்தையன்பில் மதுவில்லையோ
தோல்வியிலே தோள்கொடுக்கும்
தோழமையில் மதுவுளதே
தோளணைக்கும் காதலுக்கு காமுறுதல் மதுவாகுமே
மண்ணிலே விளைந்ததெல்லாம் விவசாயிக்கு மதுவாகுமே
கண்ணிலே காண்பதெல்லாம் ஊதாரிக்கு மதுவாகுதே
ஊடகத்தின் பயன்பாடு ஊரெல்லாம் மதுவானதே
கேடதுவென தெரிந்தும் கெட்டொழிக்கும் மதுவாகவே
நாடிடும் நாட்டமெல்லாம் ஓரளவுக்குபின் மதுவாகுமே
மனமதனை அடக்காவிடில் அத்தனையும் மதுவாகுமே
அளவதிகம் ஆகிவிடில் அத்தனையும் விசமாகையில்
மதி மயக்கும் மது நிலையை
மதுவாகும் முன் மதியில் அடக்குவோம்
அன்பே ஆனாலும் அமுதே ஆனாலும்
அளவோடு அனுபவிப்போம் நலமோடு வாழ்வதற்கே
ஜேஜெயபிரபா