மனம் மயக்கும் நிறங்கள்
இதம் பரப்பும் குணங்கள்!
உள்ளம் துள்ளும் ஊதா!
உறக்கம் நல்கும் நீலம்!
பசியைத் தூண்டும் சிகப்பு!
உடல்நலம் பேணும் பச்சை!
இசையை ரசிக்கும் இளஞ்சிவப்பு!
கொண்டல் கொணரும் கருப்பு!
சோகம் பகிரும் வெள்ளை!
ஈகை விளக்கும் செம்மஞ்சள்!
வாழ்க்கை தத்துவம் சாம்பல்!
உழைப்பின் அழகு பழுப்பு!
மங்களம் சேர்க்கும் மஞ்சள்!
வெட்கம் சேர்க்கும் செங்கருநீலம்!
எண்ணங்கள் போல என்றும்
வண்ணங்கள் தோன்றக் கூடும்!! --- பூமலர்
படம் பார்த்து கவி: மனம்
previous post