தலைப்பு: மயிலுக்கு சிம்மாசனம்
மயிலே மயிலே
ஒரு நிமிடம்
என் கேள்விக்கு
பதிலை சொல்வாயா?
உன்னில் சிறப்பாய்
பல பறவை இருந்தும்
நீ மட்டும் ஏன் தேசிய பறவை?
இந்து கடவுளுடன் இருக்கும்
என் தொடர்பை இணைத்து
எனக்கும் மதச் சாயம் பூசாதே!
முகலாயர் அமர்ந்து அரசாட்சி
செய்ததும் மயில் சிம்மாசனத்திலே
என்று மறவாதே?
மயிலுக்கு போர்வை சூட்டியதால்
கடையேழு வள்ளல்களில் ஒருவன்
என தன்னிலை உயர்ந்தான் பேகன்
அதனால் வந்த பரிசா இல்லை
இந்திய சிற்பங்களில் எல்லாம்
என் சிற்பம் செதுக்கி வைத்ததாலா?
காஷ்மீர் முதல் குமரி வரை
எல்லா சீதோஷ்ண நிலையிலும்
ஏற்றவாறு வாழ தேகம் வாய்த்ததாலா?
காண்பவர் கணங்களின் கோணம்
மாறும் விகிதத்திற்கு ஏற்ப
தொகையின் வண்ணம் மாறும்
வேற்றுமையில் ஒற்றுமை எனும்
தேசிய கொள்கைக்கு ஏற்ப
பல வண்ணங்களின் கலவையாய்
என் தோகை இருப்பதால் வந்த பரிசு
என கூறி பீலி பிறித்து ஆடியது
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)