மரகதமே
மயிலோடு தான் உன்னை ஒப்பிடுவேன்
மயில்
தோகை விரித்தால் தான் அழகு
விரிந்த கூந்தலே உனக்கு பேரழகு।
மயில் மழையில்
ஆடினால் தான் அழகு
வீதியில் நடந்து வந்தாலே
நீ பேரழகு
புத்தகத்தின் நடுவே வைத்த மயிலிறகு
குட்டி போடுமா,போடாதா என்பது
எனக்கு தெரியாது
கோபம் சிவக்க கொத்தி பேசும் பேச்சில்
நீ மயிலாக தான் தெரிவாய்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)