மாயை
இப்பூவுலகில் வாழ்க்கை
எனும் தோற்றமே
ஓர் மாயை
அழகான அறிவான
மானிட உருவமும்
ஓர் மாயை
முகப்பொலிவில் மையல்
கொள்ளும் காதல்
ஓர் மாயை
தூரத்தே தெரியும்
கானல் நீரே
நம் வாழ்வு
காலநேரம் உள்ளவரை
வாழ்க்கை நாடகத்தில்
நடிப்போம்
விடைபெறும் நேரம்
இறைவனுக்கு நன்றி
கூறி ஆசானின்
ஆசியோடு செல்வோம்🙏🙏
பத்மாவதி