மீண்டும் வரமாட்டாயோ என் மகளே!
மீண்டு வர மாட்டாயோ என் மகளே!
பால் வடியும் உன் பூ முகத்தை நான் காண வேண்டும்!
அன்பு ததும்பும் உன் கண்ளுடன் நான் பேச வேண்டும்!
சிரிப்பால் நீ என்னை கட்டிப் போட வேண்டும்!
வீடு முழுதும் நீ போடும் கொலுசொலி வேண்டும்.!
உன்னை கூட்டிச்சென்ற கயவனிடமிருந்து மீண்டும் நீ வரவேண்டும்!
உன்னை காணாமல் தவிக்கும் அம்மாவின் ஏக்கம் துடைக்க நீ விரைவில் வர வேண்டும்.!
நீ இல்லை எனும் செய்தி கேட்கும் முன் நான் இந்த உலகை விட்டு பிரிய வேண்டும்!
மீண்டும் ஓர் ஜென்மம் இருந்தால் என் மகளே உனக்கு நான் மகளாக பிறக்க வேண்டும்!
என்னை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள,
மீண்டு வா மகளே இல்லை மீண்டும் வா !😭
- -மஞ்சு –