தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.
உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்கு
தெரிவதில்லை,
நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!
உன் இடத்தில் வருவோரே,
உனக்கு உணவாகி
விடுகின்றனர்.
பணமுதலை என்று கூறப்படும் வணிக முதலாளிகள், உனக்கு உவமானமில்லை!
நீ யார் உழைப்பையும் திருடுவதில்லை.
மக்களை உருஞ்சும் அரசியல்வாதிகளை,
உனக்கு உருவகிக்கும்
மாக்களுக்கு தெரிவதில்லை!
உன் தோலை உரித்து வியாபாரம் செய்து உன் இனத்தை அழிப்பவர்களே அவர்கள் தாம் என்று!
தோற்றம் கண்டு எள்ளாமை வேண்டும்,
எனெனில் உன்னை போன்ற பரிதாபமான பிறவி இவ்வுலகில்லை!!!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)