முதலை
அளவில் பெரிய
அபார முதலையே…..
நீரும் நிலமும்
உனக்கு பிறந்த வீடா?
புகுந்த வீடா?
ஆயிரம் ஆண்டுகள்
கஜேந்திரனோடு போராடிய
ஆற்றலென்ன?
மாயவனைக் கண்டதும்
கால்கள் மடித்து
மண்டியிட்டுப் பெற்ற
மோட்சம் தான் என்ன?
மண்ணில் மனிதன்
விடும் கண்ணீர்
முதலைக் கண்ணீரான
காரணம் சொல்வாயோ
கரை ஏறி வருவாயோ
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)