படம் பார்த்து கவி: மெளன சதங்கை

by admin 2
56 views

கரண்டி ஓசைக்கு
கண்ணாடி வளையல்
பின்பாட்டு பாடிய காலம்
மெல்ல கரையேறியதை
தட்டச்சு இசைக்கு
சாத்வீக சுருதி சேர்த்து
சொல்லிச் செல்கிறது
நங்கையின் முன்கையணி!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!