தலைப்பு: மேகம் இரண்டும் கூடுகையில்
கண்ணே கண்மணியே
பெண்ணே வெண் முகிலே
காதலிலே ஊடல் என்பது
ஊறுகாய்
உன்னாலே ஊறுதடி முக்காலமும்
வினைத்தொகையாய்!
நம் இடையே
அனல் கதிர் வீசும்
ஆதவனும் ஒளி நீக்கும்
இருவருக்கும் இடைவெளி
குறைக்க இருள் நீட்டும்!
உன் கார்குழலால் பாய் போட்டு
நம் மெய் யோடு மெய்
சேர்ப்போம் வா!
பஞ்சனையில்
நெஞ்சணைப்போம் வா!
ஊடலோடு உடல் சேர
ஊடலாகும் கூடல் (ஊ+க்=கூ)
மேகம் இரண்டும் கூடுகையில்
மோக மழை பொழியும் வா! சர் கணேஷ்