உன்னைக் கண்டதும் கவி
பாட நீ என்ன என் காதலியா
உன்னை நான் பார்த்ததில்லை
நீ அலங்காரப் பொருளா?
உணவுப் பொருளா?அறியேன்
கூகுள் தேடு பொறியில் தேடி
எழுத மனம் உடன்படவில்லை
படம் பார்த்து கவிதை எழுத
காதலியின் கண்களைத்
தவிர வேறு சிறந்த படம்
உலகில் உண்டோ?
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
