யுத்தமெல்லாம் வேண்டாம்
சத்தமில்லாமல்
முத்தமிடு என்றேன்
ஏனோ அவள் வெட்கப் பட வில்லை
புன்னகைக்கவும் இல்லை
திடீரென
வாடிய முகத்தினை கண்டவுடன்
கோப்பை நிறைய தழும்பும்
பில்டர் காபியின் சுவையை ஒத்த
தேன் இதழ் முத்தத்தை
தந்து விட்டே சென்றாள்
அந்த அழகிய கனவுகளில்!
-லி.நௌஷாத் கான்-
கும்பகோணம்
படம் பார்த்து கவி: யுத்தமெல்லாம் வேண்டாம்
previous post