வண்ண எண்ணங்கள்
எண்ணங்களை வண்ணங்களால்
எத்தனை கற்பனை
எத்தனை உருவங்கள்
அத்தனையும் மனம்
இலயிக்க வைத்தாய்!
அன்னப் பறவை
பாலைப் பருகுதோ
ஆங்கே கானகம்
பற்றி எரியுதோ
மொட்டு விரித்து
மலர் மணம்பரப்புதோ
செழித்துக் கொழுத்தோர்
கரத்தினில் ஒழுகுதோ
ஏழைகள் கரம்
பற்றியுண்ண முயலுதோ
பற்றிப்படர கொடிகள்
தொற்றி வளருதோ
கரு மேகங்கள்
கொட்ட முனையுதோ
பந்தை எட்டியுதைக்க
பாலர் முயல்வரோ
அவரவர் மனத்தில்
ஆயிரம் கற்பனைகள்
எத்தனை எத்தனை
இன்பம் வைத்தாய் இறைவா!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்