- வண்ண மயிலே *
தமிழ் கடவுள் கந்தனை
தன் மீது தூக்கி சுமந்து
சுதந்திரமாய் தேசத்தையே
சுற்றி வரும் நம் தேசத்தின் தேசிய
பறவை எனும் தேவதையே;..!!
உனை பற்றி எழுதுவதே
மனதிற்கு இதமான
வண்ணம் தீட்டுவது போல்
இருக்கிறது;…!!
ஓவியத்திலேயே கண்ணை
கவரும் வண்ணங்களோடு
ஒய்யாரமாய் வீற்றிருக்கும்
தேவதையே
விடிற்காலை விருட்சமே…!
ஒவ்வொரு காலையும்
உன் கூக்குரலோடு
விடிகிறது என் பொழுது.,
உன் மேல் காதல்
கொள்ளாதவரே இல்லை,
கருணை கடல் கந்தனும்
உன் அழகில் மயங்கி
உனை பற்றிக்கொண்டானோ,
உன் வண்ண தோகைகளுக்கு
வர்ணம் பூச வானவில்லின்
வண்ணங்களை வாங்கிடுவேன்,
கண்கள் போதாது நீ
அசைந்தாடும் அழகை காண.,
நடனத்தில் உனையன்றி
யாரை காண.,!
நேசம் கொண்ட நம் தேசமும்
பற்றி கொண்டது உனை
மறக்க மனமின்றி
தேசிய பறவையாக,..!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)