படம் பார்த்து கவி: வர்ணஜாலம்

by admin
46 views


            உள்ளங்களை
       கொள்ளையடித்து
             கொள்ளும்
       வண்ணங்களே!
           வானவில்லே
       வியந்துபார்க்கும் !
  ……வர்ணஜாலமே ….
    பூமியை பிளந்து வரும்
       நீரோடையாய்;
   வண்ணங்களோடு
    இணை பிணைந்து வரும்
  …..வர்ணஜாலமே ….
    சிற்பங்களுக்கு
      உணர்வுபூர்வமாய்
       உயிரூட்டும் ;
        வண்ண வண்ண
  …..வர்ணஜாலமே …..
    செங்கதிரோன் கையில்
       வண்ண ஆடைகலாய்
     போர்த்தியிருக்கும்
……வர்ணஜாலமே …..
     என் கண்களை
    உன் வசமாக்கி
    இமைகளுக்கு
        விடுமுறையலித்த
  அழகு கொஞ்சும்
   ……வர்ணஜாலமே …..
நம் எண்ணங்களும்
வண்ணங்களை போல்
     இருக்குமாயின் ;
    வர்ணஜாலத்தில்
         வண்ணங்கள்
      நிறைந்த நந்தவணமாகும்
     ….*,,வாழ்க்கை ,*….

   ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!