வலியும் வேதனையும்
உண்டு என தெரிந்தும்
தன் கருவில்
இருக்கும் பிள்ளையை
தன் உயிராய்
பாதுகாத்து இம்மண்ணில்
ஜனிக்க வைப்பாள்
தாயானவள்……..
அதே போல்
மனிதர்கள் என்ன தான்
மரங்களை
வெட்டி வீசினாலும்
அக்னியின் வேதனையில்
நாம் வாடும் போது
நிழல் தந்து அரவணைக்கிறாள்
அன்னையின் அன்போடு
பசியில் வாடும் போது
கனி தந்து கவனித்து கொண்டாள்
தாயின் பரிவோடு
தாய்மையும் இயற்க்கையும்
ஒன்று தானே…………. 💕 ரியா ராம் 💕
படம் பார்த்து கவி: வலியும் வேதனையும்
previous post