படம் பார்த்து கவி: வானம் வெட்கத்தில்

by admin 1
57 views

வானம் வெட்கத்தில் சிவந்து
செவ்வானமாய் காட்சியளிக்க;

மேகங்களோ கண்னிமைக்க
மறந்து களையாது நிற்கின்றன;

பூமி தாய்க்கும் வயதாகி விட்டதோ
பசுமை இழந்து வறண்ட சருமத்தில்
வாடி கிடக்கிறாள்;

பூமி தாயின் உயிரை நீராக உறிஞ்சி
விட்டு ஒரு சொட்டு நீரை உணக்களிக்க மணமில்லா
மனிதர்களையும் தூக்கி
சுமக்கும் தாயே,
உனை கண்டு மனம் மறத்து போன
மேக கூட்டங்கள் கூட
அழ மறந்து போய்விட்டன
வானம் பார்த்த பூமி என்பதனை….!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!