வாயை திறந்தால்
மூடு என்றார்கள்..
கேள்வி கேட்டால்
வாயை மூடு என்றார்கள்…
அநியாத்தை கேட்டேன்
வாயை மூடு என்றார்கள்…
உண்மையை சொன்னேன்
வாயை மூடு என்றார்கள்…
பொய் என்றேன் சொன்னேன்
வாயை மூடு என்றார்கள்…
ஏமாற்றுகிறான் என்றேன்
வாயை மூடு என்றார்கள்..
நியாயம் கேட்டேன்
வாயை மூடு என்றாரகள்…
ஊழல் என்றேன்
வாயை மூடு என்றார்கள்…
இறுதியில் இறந்த பிறகும் வாயை திறந்துவிடாதே
என வாயை கட்டித்தான்
விட்டனர்…
இந்த உலகம் வாயை திறந்தாலே பயப்படுகிறதோ…
அதான் மூடியே இருக்கச்சொல்லுகிறது…
மிடில் பென்ச்…